உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெயின் மகாசங் சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஜெயின் மகாசங் சார்பில் இலவச மருத்துவ முகாம்

கோவை;கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, நேரு வித்யாலயா பள்ளியில் ஸ்ரீ கோவை ஜெயின் மகாசங் சார்பில், 8வது ஆண்டாக நேற்று, மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், 600 நோயாளிகளுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, இலவசமாக மருந்து வழங்கப்பட்டது. இதுகுறித்து, ஜெயின் சங்கத்தினர் கூறியதாவது:மருத்துவ முகாமில் பங்கேற்க, 20 நாட்களுக்கு முன்பு, 600 நோயாளிகளுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டது. அவர்களது ரத்தம், சிறுநீரக மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்பட்டது. அதன் முடிவுகளின்படி, (நேற்று) நோயாளிகள் பெற்று முகாமில் டாக்டரிடம் ஆலோசனை பெற்று கொண்டனர். அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு, நோயாளிகளுக்கு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக இருதயம், எலும்பு, கண், ஈ.என்.டி., பல், தோல், பொது மருத்துவர் என, 25 டாக்டர்கள் முகாமில் பங்கேற்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.முகாம் ஏற்பாடுகளை, ஜெயின் மகாசங் தலைவர் பவர்லால் கோட்டாரி, செயலாளர் குலாம் மேத்தா, நன்கொடையாளர்கள் சுரேந்தர், ஜஸ்வந்த் உட்பட பலர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ