உள்ளூர் செய்திகள்

இலவச பயிற்சி முகாம்

அனுப்பர்பாளையம் கனரா வங்கி கிராமப்புற வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வீட்டு முறை மசாலா, சிறுதானிய ஸ்னாக்ஸ், வடகம் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு, 10 நாட்கள் நடக்க உள்ளது.இன்று (25ம் தேதி) பயிற்சிக்கான நேர்காணல் நடக்கிறது. எழுத படிக்க தெரிந்த, 18 வயதுக்கு மேல் 45 வயது வரையுள்ள இருபாலரும் பங்கேற்கலாம்.இதில், சேர விரும்புவோர், 'கனரா வங்கி கிராமப்புற வேலை வாய்ப்பு மையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பர்பாளையம் புதுார், திருப்பூர் -641652' என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.மேலும், https://forms.gle/jGgxNjnqk3eqxDNr5 என்ற 'லிங்க்' மூலமாக, ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 94890 - 43923, 99525 - 18441, 86105 - 33436 எண்களில் அணுகலாம் என, இதன் இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி