உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.டி.நாயுடுவுக்கு  பிரம்மாண்ட சிலை  கோவை தொழில்துறையினர் வரவேற்பு  

ஜி.டி.நாயுடுவுக்கு  பிரம்மாண்ட சிலை  கோவை தொழில்துறையினர் வரவேற்பு  

கோவை:'இந்தியாவின் எடிசன்' என்றழைக்கப்படும், அறிவியல் மேதை ஜி.டி.நாயுடுவுக்கு கோவையில் பிரம்மாண்ட சிலை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, கோவை தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நந்தினி ரங்கசாமி, சி.ஐ.ஐ., தென் மண்டல தலைவர்

ஜி.டி.நாயுடு, கோவையை சேர்ந்த முக்கிய தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், சிறந்த இன்ஜினியர். நம் நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு, அவர் பெரும் பங்களிப்பை வழங்கினார். பொறியியல் மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கான கேந்திரமாக, கோவையை நிறுவுவதில் அவரது பங்களிப்பு பெரிது.விவசாயம், வாகனம், விமானம் உள்ளிட்ட துறைகளில் முன்னோடியாக திகழ்ந்தார். அவர் பல நிறுவனங்களை நிறுவினார். கரும்பு சாறு பிழியும் இயந்திரம் முதல் டீசல் இன்ஜின்கள், ஜவுளி இயந்திரங்கள் வரை ஏராளமான இயந்திரங்களை கண்டறிந்தார். தொழில் துறை தவிர, கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு சிலை வைப்பது வரவேற்கத்தக்கது.

வனிதா மோகன், நிர்வாக அறங்காவலர், சிறுதுளி அமைப்பு

கோவையை சர்வதேச அரங்கு வரை உயர்த்திய, விந்தை மனிதர் ஜி.டி.நாயுடு, எதையுமே தனது வித்தியாசமான பார்வையால் சிந்தித்து, புதுமையை கண்டறிந்தவர்.கோவைக்கான அடையாளத்தை உருவாக்கியவர். சாதாரண கால்குலேட்டரிலிருந்து, பெரிய இயந்திரங்கள் வரை கண்டறிந்தவர். விவசாயத்தொழில்நுட்பத்திலும் கோலோச்சினார். ஆட்டோமொபைல் தொழில்துறையிலும், ஆங்கிலேயருக்கு இணையாக வாகனங்களை உருவாக்கினார். ஆழமான அறிவாற்றலால், ஏராளமான கண்டுபிடிப்புகளை உலகுக்கு அர்ப்பணித்த மாமனிதர். அவருக்கு சிலை வைப்பதை வரவேற்கிறோம்.

கார்த்திகேயன், தலைவர், கொடிசியா

1969ல் கொடிசியா உருவாக காரணமானவர். கொடிசியா அலுவலகம் 30 ஆண்டுகளாக வாடகையின்றி செயல்பட வழிவகை செய்தார். அதன் காரணமாகவே, தற்போதும் கொடிசியா கட்டடத்துக்கு 'ஜி.டி.நாயுடு டவர்' என்ற பெயர் நிலைத்து நிற்கிறது. அன்று துவங்கிய ஜி.டி,நாயுடுவின், யு.எம்.எஸ். பஸ் போக்குவரத்து, இன்றளவும் பெருநகரங்களுக்கு இடையேயும், டவுன்பஸ்களாக தொடர்கிறது.தமிழகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல, அன்றே தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்படுத்திய மாமனிதர். அவரை போற்றுவோம்; அவருக்கு சிலை நிறுவுவதை வரவேற்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mohamed Yousuff
ஜூன் 27, 2024 07:16

புதுமைகளின் சிற்பிக்கு நல்ல அங்கீகாரம் மற்றும் மரியாதை


Paramasundaram
ஜூன் 26, 2024 20:49

நல்லமுடிவு,மேதையைக்கவருப்படுத்துவதுநமது கடமை


ராது
ஜூன் 26, 2024 07:59

சிலை என்று நேரத்தை வீணாக்காமல் பல ஜிடி நாயூடுகளை உருவாக்க தேடுதல் செய்வோம் குழந்தைகளின் கற்றல் ஆற்றை வளப்படுத்த அவர்களுக்கு விஞ்ஞான பொம்மைகள் கூடம் கொடிசியா வில் ஏற்படுத்தலாம் - ஒவ்வொரு பள்ளியிலும் விஞ்ஞான அறிவு வளரபொம்மைகள் விளையாட்டு சாதனை கூடம் அமைக்கலாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை