உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈச்சனாரி கோவிலில் தங்கம் அளவீடு பணி

ஈச்சனாரி கோவிலில் தங்கம் அளவீடு பணி

போத்தனூர்;கோவை, ஈச்சனாரி விநாயகர் கோவிலில், தங்கத்தை உருக்குவதற்கான அளவீடு பணி, போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. ஈச்சனாரியில் புகழ்பெற்ற விநாயகர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த, 3561 கிராம் தங்கத்தை தரம் பிரித்து, அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில், நேற்று காலை 10:00 மணிக்கு இப்பணி துவங்கியது. 3561 கிராம் தங்கத்தில், அரக்கு, அழுக்கு போன்றவை நீக்கப்பட்டன, அதிகாரிகள் கூறுகையில், 'அரசு ஆணை கிடைத்தவுடன், தங்கம் அனைத்தும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம், மும்பை அரசு உருக்காலையில் உருக்கப்பட்டு, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். அதற்கான தங்க பத்திரங்களை கோவிலுக்கு வங்கி வழங்கும். அதிலிருந்து கிடைக்கும் வட்டி, கோவில் வருவாயில் சேர்க்கப்படும்' என்றனர். இப்பணியை முன்னிட்டு, கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கோவை இணை கமிஷனர் ரமேஷ், திருப்பூர் துணை கமிஷனர் ஹர்ஷினி, கோவை துணை கமிஷனர் மற்றும் இக்கோவிலின் உதவி கமிஷனர் விஜயலட்சுமி, கோவில் பரம்பரை அறங்காவலர் அழகு மகேஸ்வரி, சரக ஆய்வாளர் மகேஸ்வரி, கோவை வைர நுண்ணறிஞர் ஜீவானந்தம், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் விக்னேஷ் துளசிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை