மேலும் செய்திகள்
உண்ணி சொட்டு மருந்து வழங்க கால்நடைத்துறை செயல்விளக்கம்
8 hour(s) ago
அரசு பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம்
8 hour(s) ago
தொடர் விடுமுறை எதிரொலி; சுற்றுலா பயணியர் குதுாகலம்
8 hour(s) ago
இன்று இனிதாக பொள்ளாச்சி
8 hour(s) ago
பொள்ளாச்சி;லோக்சபா தேர்தல் பிரசாரத்தை விறுவிறுப்பாக்கும் வாத்திய குழுவினர், 'தேர்தல் வந்தால் தான் எங்களுக்கு நல்ல காலம்,' என தெரிவித்தனர்.தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கு இன்னும், 17 நாட்கள் மட்டுமே உள்ளன. அவ்வகையில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் பிரசாரத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகளை கட்டிக்கொண்டு தெருத்தெருவாக பிரசாரம் செய்வது, மக்கள் கூடும் முக்கிய இடங்கள், கடைவீதிகளில் நடையாய் நடந்து துண்டுப்பிரசுரங்களை வினியோகம் செய்வது என்று, முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதேபோல, பெரிய பிரசார வாகனங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், வேட்பாளர்கள் கிராமங்கள் தோறும் சென்று, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆதரவு திரட்ட தயாராகி வருகின்றனர்.அவ்வாறு மக்களை ஒரே இடத்தில் திரட்டவும், பிரசார இடத்தை களை கட்ட வைக்கவும், முக்கிய தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும், மேளதாளங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.தலைவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு பிரசாரத்துக்கு வந்து சேருவதற்கு, சில மணி நேரங்களுக்கு முன்னரே, அந்த இடத்துக்கு செண்டை மேளம், பேண்ட் வாத்திய இசைக் கலைஞர்கள், சிக்காட்ட குழுவினர் சென்று, இசைக் கருவிகளை முழக்கி பிரசார களத்தை சுறுசுறுப்பாக்கி விடுவர். இதனால், வாத்திய இசைக் கலைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.இதுகுறித்து, வாத்திய குழுவினர் கூறியதாவது:வழக்கமாக, கோவில் திருவிழாக்கள்,தேர்தல் காலத்தில் பிரசார நிகழ்ச்சிகளுக்கு கட்சியினர் அழைக்கும்போது, காலையிலும், மாலையிலும் வாத்திய கருவிகளை முழங்கச் செய்கிறோம்.வழக்கமாக திருமணம், கோவில் திருவிழாவுக்கு செல்வோம். தற்போது, தேர்தல் காலம் என்பதால் பிசியாக இருக்கிறாம்.அரசியில் கட்சியினர், உள்ளூர் மட்டுமின்றி, கேரள மாநிலத்தில் இருந்தும் செண்டை மேள கலைஞர்களை வரவழைத்து விடுவர். வாத்திய குழுவினருக்கு, 600 முதல், 700 ரூபாய் சம்பளம் வழங்குகின்றனர். இதனால், வாத்திய குழுவினர் அனைவரும் பிசியாக உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago