உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சின்னவெங்காய விதை உற்பத்தி விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்

சின்னவெங்காய விதை உற்பத்தி விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்

உடுமலை;சின்னவெங்காய சாகுபடிக்கான விதைகளே, தாங்களே உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்களை கோவை வேளாண் பல்கலை., வழங்கியுள்ளது.உடுமலை சுற்றுவட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு சின்னவெங்காயம் அதிகம் சாகுபடியாகிறது. சீசன் சமயங்களில் விதைக்கு தேவை கூடுதலாகி, விலை அதிகரிக்கிறது.எனவே, விதையை விவசாயிகளே உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு, கோவை வேளாண் பல்கலை., சார்பில், வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, விதை தேவைக்காக, பராமரிக்கப்படும் பாத்திகளில், குறிப்பிட்ட ரகத்தின் குணாதிசியத்திலிருந்து மாறுபட்டு தெரியும், எல்லா பயிர்களையும், களைகளையும், அகற்ற வேண்டும்.செடிகளின் உயரம், இலை, பூங்கொத்தின் நிறம், அமைப்பு மற்றும் பூக்களின் தன்மையை கொண்டு கலவன்களை நீக்கலாம். இதனால், தரமான விதை கிடைப்பதுடன், ரகத்தின் பாரம்பரிய தன்மையை பாதுகாக்கலாம்.விதை அறுவடை தருணத்தில், பூங்கொத்தில், 50 சதவீத கருப்பு விதைகள் வெளியே தெரியும். அச்சமயத்தில், பூங்கொத்துகளை மட்டும், அறுவடை செய்து, சாக்கு பைகளின் மீது பரப்பி நன்கு உலர வைக்க வேண்டும். இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி