உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கன மழை எதிரொலி; வெள்ளியங்கிரி செல்ல தடை

கன மழை எதிரொலி; வெள்ளியங்கிரி செல்ல தடை

கோவை;கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென் திருகைலாயம் என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, 5.5 கி.மீ., மலைப்பாதையில் செல்ல வேண்டும். கடந்த சிலநாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளிலும், கனமழை பெய்வதால், வெள்ளியங்கிரி மலைப்பாதையில் ஏற முடியாத நிலை உள்ளது. இதையடுத்து பக்தர்கள் வெள்ளியங்கிரி மழைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியம் கூறுகையில்,''கடும் மழையால் வெள்ளியங்கிரி மலை ஏற முடியாது. அங்கு கடும் குளிரும் நிலவி வருகிறது. இதைக்கருத்தில் கொண்டே, மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ