உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்து மக்கள் கட்சி தலைவர் விடுதலை

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் விடுதலை

கோவை : கோவை, ஆத்துபாலத்திலுள்ள ஹிந்துக்கள் மயானத்தில்,வீரகணேஷ், சிவகுமார் ஆகியோர் சமாதியில், கடந்த 2018ல், ஆடிப்பெருக்கு வீர வழிபாடு நடத்த, ஹிந்து மக்கள் கட்சியினர் சென்றனர். தடை மீறி கூட்டம் கூடியதாக, அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், ராம்ஜி, காந்திபாபு உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவை, ஜே.எம்:7, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், அர்ஜூன் சம்பத் உட்பட நான்கு பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ