| ADDED : ஜூன் 25, 2024 12:30 AM
கோவை;ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொதுக்கூட்டம், கோவை சிறுவாணி சாலை தெலுங்கு பாளையத்திலுள்ள துர்கா மஹாலில் நடந்தது.மாநில தலைவர் தெய்வபிரகாஷ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.இதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மாநில குடும்ப பிரபோதன் கிருஷ்ணமூர்த்தி முத்துச்சாமி பேசியதாவது:கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளுதல், கோவில்களை சீர்படுத்துதல், உற்சவம், திருவிழா நடத்துதல், பிரசாதம் வழங்குதல், பாராயணம் செய்தல், நாமசங்கீர்த்தனம் நிகழ்த்துதல் ஆகியவை ஆன்மிகப் பணிகளே.ஆன்மிகம் என்றால் என்ன, கோவில் எதற்கு என்ற தத்துவங்களையும், சிறப்புகளையும், ஹிந்து தர்மத்தையும், கலாசாரத்தையும், பண்பாட்டையும் நம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். அப்போது ஆன்மிகம் உயிர்ப்பெறும். இவ்வாறு, அவர் பேசினார்.இக்கூட்டத்தில் ஏராளமான ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் பங்கேற்றனர்.