உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணம் கொடுத்து வாக்காளர்களை கொச்சைப்படுத்த விரும்பவில்லை

பணம் கொடுத்து வாக்காளர்களை கொச்சைப்படுத்த விரும்பவில்லை

கோவை:கோவை, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பா.ஜ., செயல் வீரர்கள் கூட்டம், சரவணம்பட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கோவை வேட்பாளர் அண்ணாமலை பேசியதாவது:தமிழ்நாடு முழுவதும் உள்ள பா.ஜ.,வினர் உற்சாகமாக உள்ளனர். அடுத்த 25 நாட்கள் முழுநேரமாக சென்று, ஓட்டு சேகரிக்க வேண்டும். கோவை, பொலிவை இழந்து வருகிறது. பாலம் கட்டினாலும், ரோடுகள் மோசமாக உள்ளன. கோவைக்கு எந்த திட்டம் வந்தாலும், எதிர்த்து வருகின்றனர். குடிநீர், ரோடு வசதி, ஆக்கிரமிப்பு இல்லாத நீர்நிலை, போக்குவரத்து வசதி என, அனைவரும் நிம்மதியாக இருக்க வேண்டும். புதிய, புதிய தொழிற்சாலைகள் வர வேண்டும். கோவையின் வளர்ச்சியும், மக்களின் மகிழ்ச்சியான வாழ்வும்தான் நம் நோக்கம். எம்.பி.,ஆக வேலை செய்து, கோவையை மாற்றிக் காட்டினால் தான், 2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும். என்னுடைய கனவு எல்லாம், தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதுதான். அதற்கு, கோவை மக்களின் மனதை வெல்ல வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்து, அவர்களை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. வேட்பாளருக்கும், வாக்காளருக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை பேசினார். கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில முன்னாள் செயலாளர் செல்வக்குமார், சரவணம்பட்டி மண்டல் தலைவர் ரத்தினசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்