| ADDED : ஜூலை 16, 2024 02:05 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல், சிறிது நேர இடைவெளி விட்டு, விட்டு பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ரோடுகளில் மழைநீர், கழிவுநீரும் கலந்து வெள்ளமாக ஓடியதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகினர். ரோட்டில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுபோன்று, பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்வாய்களில் இருந்து கழிவுநீரும், மழைநீரும் கலந்து ஓடியது; தெப்பக்குளம் ராஜகணபதி கோவில் அருகே கழிவுநீருடன், மழைநீரும் குட்டையாக தேங்கியதால், பக்தர்கள் சிரமப்பட்டனர்.மழைக்காலங்களில் வடிகால்களை துார்வாரவும், கழிவுநீர் முறையாக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.