உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய குற்றவியல் சட்டங்களில் மனித உரிமை பாதுகாப்பு நீக்கம் கருத்தரங்கில் தகவல்

புதிய குற்றவியல் சட்டங்களில் மனித உரிமை பாதுகாப்பு நீக்கம் கருத்தரங்கில் தகவல்

கோவை;சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தின நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள, சங்க அரங்கில் நடந்தது.கோவை வக்கீல் சங்கம் சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு, வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.செயலாளர் சுதீஷ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வக்கீல் வி.பி.சாரதி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:மத்திய அரசு கொண்டு வந்துள்ள, புதிய மூன்று குற்றவியல் சட்டங்களில், மனித உரிமை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. சித்ரவதை தடுப்பு தொடர்பாக, எந்த பிரிவும் சேர்க்கப்படவில்லை.சித்ரவதை தடுப்புக்கான சர்வதேச சட்டத்தில், இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஆனால், அதை செயல்படுத்த இந்தியாவில் சட்டம் இயற்றப்படவில்லை. சித்ரவதையை தடுப்பதற்கான சட்டத்தை இனியாவது இயற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், மூத்த வக்கீல்கள் சேகர் அண்ணாதுரை, மதிவாணன் மற்றும் வக்கீல்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ