உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூடப்படாத கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

மூடப்படாத கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

வால்பாறை : வால்பாறை நகரில், மூடப்படாத கால்வாயினால், அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகர் அருகிலுள்ள வாழைத்தோட்டம் பகுதியில், தாலுகா அலுவலகம் செல்லும் ரோட்டின் இடது பக்கம், திறந்தவெளி கால்வாய் கடந்த பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் ரோட்டில் மக்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்கள் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.மக்கள் கூறுகையில், 'வாழைத்தோட்டம் ரோட்டில், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. தாலுகா அலுவலகம் செல்லும் மக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் இந்த வழியாக தான் நடந்து செல்கின்றனர்.திறந்த நிலையில் உள்ள கால்வாயில் ரோட்டில் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்தால் உயிர்பலியாகும் அபாயம் உள்ளது. நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், யாரும் கண்டு கொள்ளவில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்