உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கணியூர் ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று

கணியூர் ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று

கருமத்தம்பட்டி : கணியூர் ஊராட்சியின் சிறந்த நிர்வாகம், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதை அங்கீகரித்து ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கணியூர் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்துதல், குடிநீர் வழங்கல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள், வடிகால் வசதி, தெரு விளக்குகள் வசதிகள், பதிவேடுகள் பராமரிப்பு, மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றை, சர்வதேச தரச்சான்று சம்மேளனத்தால், பல முறை தணிக்கை செய்யப்பட்டது. இறுதி தணிக்கை செய்யப்பட்டு, செயல்பாடுகளை அங்கீகரித்து, ஐ.எஸ்.ஓ., 9001 :2015 தரச்சான்று பெற தேர்வு செய்யப்பட்டது. கலெக்டர் கிராந்தி குமார், தரச்சான்றிதழை, ஊராட்சி தலைவர் வேலுசாமி, துணைத்தலைவர் ராஜூ ஆகியோரிடம் வழங்கி பாராட்டினார். கூடுதல் கலெக்டர் ஸ்வேதா சுமன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், சூலூர் பி.டி.ஓ.,க்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஊராட்சி மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். அதற்கான அங்கீகாரமாக இந்த தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி