உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிச்சயம் கிடைக்கும் வேலை; இன்று பங்கேற்க அழைப்பு

நிச்சயம் கிடைக்கும் வேலை; இன்று பங்கேற்க அழைப்பு

கோவை, : கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இன்று, சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, 'ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிட்' என்ற தனியார் நிறுவனத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள 4,000த்துக்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களுக்கான, சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், இன்று காலை 10:30 மணியளவில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடக்கிறது. ஹோம் சேல்ஸ் ஆபிசர், ஜியோ பாயின்ட் மேனேஜர், ஜியோ பைபர் இன்ஜினியர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த, அனுபவம் உள்ள அல்லது அனுபவம் இல்லாத மனுதாரர்களை நேர்காணல் வாயிலாக தேர்வு செய்ய உள்ளனர்.முகாமில் பங்கேற்க அதிகபட்ச உச்ச வயது 45. விருப்பமுள்ள மனுதாரர்கள், கல்விச் சான்றிதழ் நகல்களுடன், நேரடியாக வருகை தரலாம். கலந்து கொள்ள விரும்பும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.விபரங்களுக்கு, 0422 - 2642388.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை