மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
9 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
9 hour(s) ago
தேசிய நூலக வார விழா
9 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
9 hour(s) ago
கோவை:பல்வேறு வழக்குகளில் தேடப்படும் ரத்தினபுரியை சேர்ந்த சுஜிமோகன், போலீசாரை கண்டதும் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.கோவை, கருப்பராயன் பாளையத்தை சேர்ந்தவர் கணேசன்,41; ஆட்டோ டிரைவர். இவர் நீலிக்கோணாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் நடந்துசென்றுகொண்டிருந்தார். அங்கு வந்த ரத்தினபுரி, கண்ணப்ப நகரை சேர்ந்த சுஜிமோகன்,30, கணேசனை பின்தொடர்ந்து சென்று, பணம் கேட்டுள்ளார்.தரமறுத்த கணேசனிடம், தான் ரத்தினபுரி ரவுடி என்றும், நிறைய வழக்குகள் தன்மீது இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளார். பின்னர், தான் இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனின் வயிற்றில் வைத்து மிரட்டி, மொபைல் போன், ரூ.450 ரொக்கத்தை பறித்து தப்பினார்.கணேசன் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான சுஜிமோகனை தேடிவந்தனர். சுஜிமோகன் மீது ஏற்கனவே கொலை முயற்சி உட்பட, 11 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு போலீசார் வாகனத்தை பார்த்ததும் கணபதி, டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து சுஜிமோகன் கீழே குதித்துள்ளார்.இதில், அவரது இரு கால்களிலும் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago