| ADDED : ஜூலை 16, 2024 11:18 PM
பெ.நா.பாளையம்;நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னிமடை, கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.கோவை மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்., கட்சியின் நகர தலைவர் ராஜேந்திரன், மூத்த தலைவர்கள் மோகன், கோவிந்தராஜ், செயலாளர் லட்சுமிபதி, பாலாஜி, பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.கணுவாய், பன்னிமடை பகுதிகளில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்., கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் மணி, வட்டாரத் தலைவர் மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.