உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம்

கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம்

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு கல்லூரிகளில் கார்கில் போர் வெற்றி தினத்தை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.துடியலூரில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், கார்கில் போர் வெற்றி தின ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கேசவசாமி தலைமை வகித்தார்.என்.சி.சி., அலுவலர் ஹவில்தார் பவன்குமார், கல்லூரி என்.சி.சி., அலுவலர் ரமேஷ், துடியலுார் போலீஸ் எஸ்.ஐ.,கள் அருண்குமார், அய்யாசாமி, ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துடியலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். துடியலூரில் பல்வேறு வீதிகளில் சென்ற ஊர்வலம், துடியலூர் போலீஸ் ஸ்டேஷனை மீண்டும் அடைந்தது. இவ்விழாவை ஒட்டி ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லூரியில் கார்கில் போர் வெற்றி தினத்தை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் நந்தினி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் வரவேற்றார். நிர்வாக அலுவலர் பத்மநாபன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவத்தினர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பாஸ்கரன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். உதவி பேராசிரியர் புனிதவதி நன்றி கூறினார்.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லுாரியில் பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத்துடன் இணைந்து கார்கில் வெற்றி, 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ அதிகாரி கிரி, விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கார்கில் போர் குறித்தும், இந்திய ராணுவ வீரர்களின் சேவை, தியாகம் குறித்தும் பேசினார். சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய மாணவர் படை மாணவர்கள் சார்பில், கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் திருவுருவ படங்களுக்கு, கல்லுாரி செயலர் சாரம்மா, முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் ஐயப்பதாஸ், பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். என்.சி.சி., மாணவர்கள் வரைந்த கார்கில் போர் குறித்த ஓவியம், அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் தீபக் ரிஷாந்த் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ