உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆபரண வடிவமைப்புக்கு விருது கீர்த்திலால்ஸ் நிறுவனம் சாதனை

ஆபரண வடிவமைப்புக்கு விருது கீர்த்திலால்ஸ் நிறுவனம் சாதனை

கோவை:ஆபரண வடிவமைப்புக்கான விருது வழங்கும், ஜெ.இ.ஏ.,-2024 நிகழ்ச்சியில் கீர்த்திலால்ஸ் நிறுவனம் இரண்டு விருதுகளை வென்று, சாதனை புரிந்துள்ளது. நேர்த்தியான கைவினைத் திறன், அழகான வடிவமைப்புக்கான ஜூவல்லரி எமினென்ஸ் அவார்டு வழங்கும் விழா, ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது.இதில், மணப்பெண்ணிற்கான ரத்தின வண்ணக் கற்களுடன் வடிவமைக்கப்பட்ட ஆபரணம் மற்றும் வைர வளையல் மற்றும் பிரேஸ்லட் என்ற இந்த இரு விருதுகளை, கீர்த்திலால்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.இவ்விழாவில், இந்திய திரைப்பட நடிகை ஈஷா தியோல் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். கீர்த்திலால்ஸ் வணிக மேம்பாட்டு இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் விருதுகளை சாத்தியமாக்கியவர்களைப் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி