உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சித்திரைச்சாவடி தடுப்பணையில் குதுாகலம்; குடிகாரர்களும் கூட்டத்துடன் கும்மாளம்

சித்திரைச்சாவடி தடுப்பணையில் குதுாகலம்; குடிகாரர்களும் கூட்டத்துடன் கும்மாளம்

தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளில், வார விடுமுறையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக, கடந்த ஒரு மாதமாக, நொய்யல் ஆற்றில் தொடர்ந்து, நீர்வரத்து காணப்பட்டு வருகிறது.வார விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட, நகர்ப்புறங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்களின் குடும்பத்துடன் நீர்நிலைகளுக்கு வந்து, தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். சித்திரைச்சாவடி தடுப்பணை, ஒரு சுற்றுலாதலம் போல மாறிவிட்டது. தற்போது, நொய்யல் ஆற்றில் நீர்வரத்தும் உள்ளதால், நேற்று சித்திரைச்சாவடி தடுப்பணையில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.இதற்கிடையே தடுப்பணையில் மது அருந்திய சிலர், நீரில் இறங்கி, வேகமாக செல்லும் நீரில் விளையாடினர். இதனால், குடும்பத்துடன் வந்த பலரும், முகம் சுளித்தனர்.விடுமுறை தினத்தில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்கின்றனர் அவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை