உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று சட்டங்களை கண்டித்து வக்கீல்கள் சங்கம் போராட்டம்

மூன்று சட்டங்களை கண்டித்து வக்கீல்கள் சங்கம் போராட்டம்

கோவை;மூன்று சட்டங்களை கண்டித்து, கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சுதீஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக, அனைத்து வக்கீல்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. இந்த சட்டம், வக்கீல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாலும், இந்திய அரசியலமைப்பு பிரிவு, 348க்கு எதிராக நிறைவேற்றபட்டதாலும், அதை வன்மையாக கண்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தை நிறுத்தி வைத்து, மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்ற வேண்டும். மூன்று சட்டங்களை நிறைவேற்றுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 27, 28ம் தேதிகளில், சங்க வழக்கறிஞர்கள், அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்து முழுமையாக விலகி இருப்பது எனவும், நாளை காலை 11:00 மணிக்கு, கோவை நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி