உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் லேசான துாறல் :மழை எதிர்பார்ப்பு

கோவையில் லேசான துாறல் :மழை எதிர்பார்ப்பு

கோவை:கோவையில் எதிர்வரும் ஐந்து நாட்கள் லேசான துாறல் மழை எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.அதன் படி, கோவையில் அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை, 36-37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் இரவு நேரம் 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேரம் 30 சதவீதமாகவும் இருக்கும்.மண் ஈரத்தினை பொறுத்து, இறவை பயிர்களுக்கு நீர்பாசனம் செய்து பயிர் கழிவு மூடாக்கு இடவேண்டும். சில பகுதிகளில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் கரும்பின் நுனிக்குருத்துப்புழு வர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் அடிக்கடி நீர் பாய்ச்சி வயலை ஈரமாக வைத்துக்கொள்வதுடன் பயிர் மூடாக்கு செய்யலாம்.உள்ளூர் பகுதிகளில் சுழற்காற்று மற்றும் இடியுடன் கூடிய கோடைமழை பொழிய வாய்ப்புள்ளது. எனவே, 5 மாத வயதுடைய வாழை மரங்களுக்கு முட்டுகொடுக்கவும். மேலும், கால்நடை மற்றும் கோழிகளுக்கு போதுமான அளவு, சுத்தமான தண்ணீர் கொடுக்க விவசாயிகளுக்கு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை