உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரமசிவன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

பரமசிவன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

நெகமம் : நெகமம், கப்பளாங்கரை பரமசிவன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.நெகமம், கப்பளாங்கரையில் உள்ள பரமசிவன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த பிப்ரவரி மாதம், 15ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து, மண்டல பூஜை நிகழ்ச்சி, 48 நாட்கள் நடந்தது.நிகழ்ச்சியில், நேற்றுடன் மண்டல பூஜை நிறைவடைந்தது. நேற்று காலை சுவாமிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.சுவாமிக்கு வேள்வி மற்றும் திருக்கல்யாண வழிபாடு நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ