உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 43 பேருக்கு நற்பணி சான்றிதழ் கோவை எஸ்.பி., பாராட்டு

43 பேருக்கு நற்பணி சான்றிதழ் கோவை எஸ்.பி., பாராட்டு

கோவை:கோவை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், 43 பேருக்கு நற்பணி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சுதந்திர தின விழாவையொட்டி வ.உ.சி., மைதானத்தில் நடந்த விழாவில், சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு நேற்று பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் நான்கு பேர், எஸ்.ஐ.,கள் மூவர், எஸ்.எஸ்.ஐ.,கள் இருவர், தலைமை காவலர்கள் ஐந்து பேர், முதல் நிலைக் காவலர்கள் ஆறு பேர், போலீசார், 15 பேர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் எட்டு பேர் என, 43 பேருக்கு நற்பணி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்கள், 43 பேரையும் கோவை எஸ்.பி., கார்த்திகேயன் நேற்று வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி