உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிடித்தம் செய்த தொகையை கேட்டு எம்.இ.எஸ்., முறையீடு

பிடித்தம் செய்த தொகையை கேட்டு எம்.இ.எஸ்., முறையீடு

கோவை;பணி முடிந்த பிறகு பிடித்தம் செய்த தொகையை திரும்ப தருமாறு, பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா(எம்.இ.எஸ்.,) சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரேஸ்கோர்ஸ் அருகே ரெட்பீல்ட்ஸ் ரோட்டில் உள்ள, ஐ.என்.எஸ்., அக்ரானி வளாகத்தில், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின், மிலிட்டரி இன்ஜினியர்ஸ் சர்வீசஸ்(எம்.இ.எஸ்.,) சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் வெங்கடசாமி தலைமை வகித்தார்.அப்போது, ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்த வரம்புகளை அதிகரிக்க வேண்டும். பணிக்குழு பரிந்துரையின்படி, பணி முடிந்த பிறகு பிடித்தம் செய்த தொகையை திரும்பத்தர வேண்டும். ஒப்பந்தத்தின்போது ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.தொடர்ந்து, அக்ரானியில் உள்ள மிலிட்டரி இன்ஜினியர்ஸ் சர்வீசஸ் அதிகாரியிடம், சங்க செயலாளர் ஜெயகுமார், தென் மண்டல துணைத்தலைவர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை