உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை : 'சேமித்த தானிய பூச்சிப்பொறி' இயந்திர கண்டுபிடிப்பை வணிகமயமாக்கும் நோக்கில், பல்கலை மற்றும் வாரணாசி பராஷர் அக்ரோடெக் பயோ நிறுவனம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடந்தது. இந்த இயந்திரம், சேமித்து வைக்கப்படும் தானியங்களில் பூச்சியை கண்டறியும் சாதனமாகும். இதனை வேளாண் பல்கலை பூச்சியியல் துறை பேராசிரியர் மோகன் உருவாக்கிஉள்ளார்.ஒப்பந்தத்தில், பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், தனியார் நிறுவன இயக்குனர் பூர்ணேந்திரசேகர் ஆகியோர் கையெழுத்திட்டு, கோப்புகளை மாற்றிக்கொண்டனர். நிகழ்வில், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர் சோமசுந்தரம், வேளாண் பொறியியல் கல்லுாரி முதல்வர் ரவிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை