உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சி கமிஷனராக கணேசன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.பொள்ளாச்சி நகராட்சி கமிஷனராக இருந்த சுப்பையா, ஓய்வு பெற்றதையடுத்து, நகராட்சி கமிஷனர் (பொ) செந்தில் முருகன் இருந்தார். இந்நிலையில், திருவேற்காடு கமிஷனராக இருந்த, கணேசன், பொள்ளாச்சி நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதில், நகராட்சி கமிஷனராக கணேசன், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு, நகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.நகராட்சி கமிஷனர் கூறுகையில்,''பொள்ளாச்சி நகராட்சியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காணப்படும். சுகாதாரம் முழு அளவில் பாதுகாக்கப்படும். நகரப்பகுதியில், குப்பை தேங்காமல் இருக்கவும், சுகாதாரமாக இருக்க அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை