உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய வீல்சேர் வாள்வீச்சு: கோவையில் துவக்கம்

தேசிய வீல்சேர் வாள்வீச்சு: கோவையில் துவக்கம்

கோவை;தேசியளவிலான வீல்சேர் வாள்வீச்சு போட்டி, அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது.இந்திய வீல்சேர் பெடரேஷன், இந்திய பாராலிம்பிக் விளையாட்டு சங்கம், தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் டவுன்டவுன் சார்பில், 16வது தேசியளவிலான வீல்சேர் வாள்வீச்சு போட்டி, கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மார்ச், 21 முதல் 23 வரை நடக்கிறது.போட்டியை, கே.பி.ஆர்., நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, தமிழ்நாடு பாராலிம்பிக் சங்க தலைவர் சந்திரசேகர், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் திட்ட தலைவர் காட்வின் மரியா விசுவாசம், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் கவர்னர் செல்லா ராகவேந்திரான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்