உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை நகராட்சியில் இயற்கை உரம் உற்பத்தி

காரமடை நகராட்சியில் இயற்கை உரம் உற்பத்தி

மேட்டுப்பாளையம்;காரமடை நகராட்சி குப்பை கிடங்கில், குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளில், மகளிர் சுய உதவி குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். காரமடை நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டில் இருந்து தினமும், 14 டன் குப்பைகள் சேகரமாகின்றன. துாய்மை பணியாளர்கள் மக்கும், மக்காத குப்பைகள் என, தனியாக தரம் பிரித்து, அம்பேத்கர் நகரில் உள்ள, நகராட்சி குப்பை கிடங்கில் குவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளில் இருந்து, மகளிர் சுய உதவி குழுவினர் வாயிலாக, இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து நகராட்சி கமிஷனர் மனோகரன், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது: காரமடை நகரில் தினமும் சேகரமாகும் குப்பைகளில், மக்கும் குப்பைகளை பிரித்து, அதை இயந்திரம் வாயிலாக அரைக்கப்படுகிறது. அந்த குப்பையுடன் சர்க்கரை கரைசலை சேர்த்து, தொட்டிகளில் குவித்து வருகின்றோம். ஒவ்வொரு தொட்டியிலும் ஒரு டன் அளவுள்ள குப்பைகள் வைத்துள்ளோம். 15 நாட்களுக்கு ஒரு முறை, அந்த குப்பையை கலவை செய்யப்படும். 45 நாட்களுக்கு பிறகு, அந்த குப்பை இயற்கை உரமாக மாறும். கடந்த ஆண்டு பரிசார்த்த முறையில், உற்பத்தி செய்த இயற்கை உரங்களை, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது அதிக அளவில், இயற்கை உரம் உற்பத்தி நடைபெறுகின்றன. இவ்வாறு கமிஷனர், சுகாதார ஆய்வாளர் கூறினர். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ