உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு கல்வி குழுமம் சார்பில் ஆதரவற்ற பெண்ணுக்கு உதவி

நேரு கல்வி குழுமம் சார்பில் ஆதரவற்ற பெண்ணுக்கு உதவி

கோவை:திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கல்விக்குழுமம் சார்பில், நேரு கலை கல்லுாரி மாணவிகள் விடுதியில், ஆதரவற்ற பெண்ணுக்கு அழகு நிலையம் அமைத்துக்கொடுத்து, தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பெற்றுள்ளது. கொரோனா காலத்தில், கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்கு போராடியவர் உமா மகேஸ்வரி. இவரின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வகையில், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், மாணவிகள் விடுதியில் அழகு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நேரு கல்விக்குழுமங்களை சேர்ந்த மாணவிகள், இதனை பயன்படுத்திக்கொள்வார்கள். இவர்களிடம் இருந்து பெறப்படும் கட்டணம், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். இவரின் குழந்தைகள், நேரு சர்வதேச பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கோவை மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்' விழாவில் கலெக்டர் கிராந்திகுமார், அழகு நிலையத்தின் சாவியை , உமா மகேஸ்வரியிடம் ஒப்படைத்தார்.இந்நிகழ்வில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் மற்றும் அரசு அலுவலர்கள், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ