உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - ராமேஸ்வரம் ரயிலுக்கு புதிய பெட்டிகள்; தினசரி ரயிலாக இயக்க வலுக்கிறது கோரிக்கை

கோவை - ராமேஸ்வரம் ரயிலுக்கு புதிய பெட்டிகள்; தினசரி ரயிலாக இயக்க வலுக்கிறது கோரிக்கை

கோவை: கோவை-ராமேஸ்வரம் வாராந்திர ரயிலில், பழைய பெட்டிகள் அனைத்தும் மாற்றப்பட்டு, புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வந்தது. பழமை வாய்ந்த அந்த ரயில் சேவை, கடந்த 2008ல், அகல ரயில் பாதைப் பணிக்காக மீட்டர் கேஜ் அகற்றப்பட்டபோது, நிறுத்தப்பட்டது. அதேபோல, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பல்வேறு ரயில்களும் நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின்னும் மீண்டும் துவக்கப்படவில்லை.இதில் கோவை-ராமேஸ்வரம் தினசரி ரயில் சேவை, பல ஆயிரம் பக்தர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் அந்த ரயிலுக்குப் பதிலாக, தற்போது கோவை-ராமேஸ்வரம் இடையே, வாராந்திர ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பாம்பன் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் நடப்பதால், ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படும் இந்த ரயில், ரயில்வே பாலப்பணிகள் முடிந்த பின், மீண்டும் ராமேஸ்வரம் வரை இயக்கப்படவுள்ளது.தற்போது இந்த ரயிலில், ஸ்லீப்பர் பெட்டிகள் எட்டு, மூன்றடுக்கு ஏ.சி., பெட்டிகள் ஏழு, இரண்டு அடுக்கு ஏ.சி., பெட்டிகள் ஒன்று, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இரண்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டி ஒன்று என மொத்தம் 19 பெட்டிகள் உள்ளன. இதுவரை பழைய ஐ.சி.எப்.,பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலில், அனைத்துப் பெட்டிகளும் எல்.எச்.பி.,நவீன பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.இதற்காக, கோவை ரயில் பயணிகள் சங்கங்கள், ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளன. இந்த ரயில் சேவையை, தினசரி ரயில் சேவையாக மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளன. தினசரி ரயிலாக இந்த ரயில் இயக்கப்படும்பட்சத்தில், கோவையிலிருந்து புதுக்கோட்டை, தேவகோட்டை, காரைக்குடி, ராமேஸ்வரம் செல்லும் பல ஆயிரம் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Arul Nesaiah
ஜூலை 25, 2024 11:29

தங்கள் செய்திகள் அனைத்தும் மிக மிக அருமை நன்றி


Mohan Natarajan
ஜூலை 23, 2024 05:33

இம்மீடிட்டேலி ரன் தி ட்ரெய்ன் டெய்லி basis.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை