| ADDED : ஜூன் 23, 2024 12:08 AM
கோவை;திருப்பூர் மேம்பாலம் சாலையில் உள்ள, சுப்ரீம் மொபைல்ஸ் கிளையில், 'ஓப்போ எப்27 புரோ பிளஸ்' அறிமுக விழா நடந்தது. நடிகர் நரேந்திர பிரசாத் அறிமுகப்படுத்தினார். ஓப்போ இந்தியாவில் முதல் டேமேஜ் மற்றும் வாட்டர் புரூப் கொண்ட மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த மொபைல், கேமிங், வீடியோ, செல்பி, வீடியோ அழைப்புகள், ஹீட் கன்ட்ரோல் சப்போர்ட் என அனைத்துக்கும் சிறந்தது. இதன் விலை, ராம் மற்றும் ரோம் திறனுக்கு ஏற்ப, 27,999 - 29,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக, எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத கேஷ்பேக் உட்பட, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிமுக விழாவில், கிட்ஸ் கிளப் பள்ளிகளின் சேர்மன் மோகன் கார்த்திக், ஓப்போ தமிழ்நாடு கணக்கு மேலாளர் உமா மகேஸ்வரன், 'இனி ஒரு விதி செய்வோம்' அறங்காவலர் கவிதா ஜனாதனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.