உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேவாலயங்களில் பெரிய வியாழன் அனுசரிப்பு

தேவாலயங்களில் பெரிய வியாழன் அனுசரிப்பு

கோவை;பெரிய வியாழனை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நடந்தது. கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலம் கடைபிடித்து, ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முன் உள்ள ஒரு வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. முதல் நாள் குருத்தோலை ஞாயிறுடன் துவங்கி, பெரிய வியாழன், புனித வெள்ளி ஆகிய நிகழ்வுகள் அனுசரிக்கப்படுகின்றன. நேற்று, பெரிய வியாழன் முன்னிட்டு தாழ்மையை கற்றுக்கொடுக்கும் விதமாக, இயேசு, தனது சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில், கோவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், பாதிரியார்கள், 12 பேரின் பாதங்களை கழுவும் சடங்கு நடந்தது. தொடர்ந்து இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டு, ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ