உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் யோகா தினம் கடைபிடிப்பு

ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் யோகா தினம் கடைபிடிப்பு

கோவை:கோவை, ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் அலுவலகத்தில், 10வது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. நடப்பாண்டுக்கான யோகா தின கருப்பொருள் 'யோகா- நமக்கும் சமூகத்துக்கும்' என்பதாகும். தனி நபர் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதோடு, ஆரோக்கியமான சமூகத்தைப் பேணுவதாகும்.சர்வதேச யோகா தின நிகழ்வில் பேசிய ஜி.எஸ்.டி., கமிஷனர் ராமகிருஷ்ணன், 'யோகா செய்வதால், எவ்வாறு உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது, உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது,மன அழுத்தத்துக்கு தீர்வு கிடைக்கிறது, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது'என்பது குறித்து பேசினார்.அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும், யோகா பயிற்றுனரின் வழிகாட்டுதலோடு, ஆசனங்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி