| ADDED : ஜூலை 09, 2024 12:43 AM
கோவை;ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் நடந்த, இரண்டு நாள் சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சி நிறைவடைந்தது.பாரதீய வித்யா பவன் சார்பில், 'விஷ்ணு சஹஸ்ர நாம மஹிமா' என்ற தலைப்பில், கலைமாமணி விசாகா ஹரியின், இரண்டுநாள் சங்கீத உபன்யாசம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பவன் பள்ளியில் நேற்றுமுன்தினம் துவங்கியது.நிறைவு நாளான நேற்று மாலை, 6:00 முதல் 8:00 மணி வரை, விசாகா ஹரியின், சங்கீத உபன்யாசம் நடந்தது. ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதில், விசாகா ஹரி பேசியதாவது:'விஷ்ணு சஹஸ்ரநாமம் கூறுபவர்களும், ஆத்மார்த்தமாக என்னை நினைப்பவர்களும், தங்களை பற்றி கவலைப்பட வேண்டாம். தர்மம் எப்போதும் பூஜ்ஜியம் ஆகாது. தர்மம் குறையும்போது நான் வருவேன்' என, கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.தேவர்களுக்கும், மற்றவர்களுக்கும் புகலிடம் கிருஷ்ணன் தான். காலமும் விஷ்ணுவின் ரூபம். உணர்வும் ரூபமாகவும், எங்கும் பார்ப்பவருமாகவும் உள்ளார். பிறப்பே இல்லாதவர், அவரை வெளியே தேடக்கூடாது. அவர், நமக்குள்ளே தான் இருக்கிறார். ஒருமுறை கிருஷ்ணனின் பிடியில், நாம் வந்துவிட்டால், எப்போதும் நம்மை கைவிடமாட்டார்.இவ்வாறு, அவர் பேசினார்.