உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விபத்தில் ஒருவர் காயம்

வாகன விபத்தில் ஒருவர் காயம்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தாமரைக்குளத்தில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் திலிப்குமார், 40, மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றுகிறார். இவர், தாமரைக்குளம் பகுதியில் பைக்கில் சென்றார். கோவை, குனியமுத்தூரை சேர்ந்த ஆசிக்அலி என்பவர் ஓட்டி சென்ற காரை திடீரென நிறுத்தியுள்ளார்.அப்போது, திலிப்குமார் சென்ற பைக், கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயமடைந்த திலிப்குமாரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை