உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோட்டார் வாகன அலுவலகம் திறப்பு

மோட்டார் வாகன அலுவலகம் திறப்பு

கோவை;கோவை, பி.ஆர்.எஸ்., வளாகத்தில், கவாத்து மைதானம் அருகே, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் வாகன பிரிவு அலுவலக கட்டடம் தற்போது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். இதன் பின்புறம் காவலர்களுக்கான ஓய்வு அறை, இசை வாத்தியங்களுக்கான அறை, மின்சார அறைகளும், புதிய கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளன.கட்டடத்தை திறந்து வைத்து கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''கடந்த, 1912ல் கட்டப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கட்டடத்தை பாதுகாக்க, மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. காவலர்களுக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, பெண் காவலர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை