| ADDED : ஜூன் 20, 2024 05:09 AM
உடுமலை, : உடுமலையில், ஓய்வூதியர்களுக்கான சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில், ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.உடுமலை ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம், பொள்ளாச்சி வாசன் கண் மருத்துவமனை மற்றும் உடுமலை ஈகுவிடாஸ் வங்கி சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் லதாங்கி அரங்கில் நடந்தது.பொள்ளாச்சி வாசன் கண் மருத்துவமனை டீன் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். டாக்டர் தர்மலிங்கம் மற்றும் குழுவினர் முகாமில் பங்கேற்ற ஓய்வூதியர்களுக்கு பரிசோதனை செய்தனர்.கண் பரிசோதனை செய்துகொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஈகுவிடாஸ் வங்கி மேலாளர் சேவியர் பிரவின்ராஜா இன்சூரன்ஸ், வங்கி சேவை குறித்து விளக்கமளித்தார்.முகாமிற்கான ஏற்பாடுகளை, உடுமலை ஓய்வுபெற்ற அலுவலக சங்க நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.