மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
1 hour(s) ago
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில், நாள் முழுதும் சரக்கு விற்பனை அமோகமாக உள்ளது.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் விதியை மீறி, 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது.மேலும், இந்த மதுவை டாஸ்மாக் கடை அருகில் உள்ள இடத்தில் வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.மது குடிப்பவர்கள் எந்த நேரத்தில் சென்றாலும், மது இங்கு கிடைப்பதால், யோசிப்பது இல்லை. சரக்கு கிடைத்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் வாங்கிச்செல்கின்றனர். மேலும், சிலர் இங்கேயே அமர்ந்து மதுவை குடித்து விட்டு செல்கின்றனர்.இதுமட்டுமின்றி, மது குடித்து விட்டு ரோட்டில் தாறுமாறாக வாகனம் ஓட்டிச்செல்கின்றனர். இந்த தேசிய நெடுஞ்சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வேகமாக செல்வதால், இவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்தும் நடந்து வருகிறது.விதி மீறி மது விற்பனை செய்வது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கும் பதிந்துள்ளனர். ஆனால் மது விற்பனை மட்டும் தொடர்கதையாகி உள்ளது.இதனால் அவ்வழியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே, அரசு நிர்ணயித்த நேரத்தில் மட்டும் மது கடையை திறக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago