உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக் மதுக்கடை பார் அமைக்க மக்கள் எதிர்ப்பு

டாஸ்மாக் மதுக்கடை பார் அமைக்க மக்கள் எதிர்ப்பு

போத்தனூர்;எல்.ஐ.சி., காலனி அருகே டாஸ்மாக் மதுக்கடைபார் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சரிடம் மனு கொடுத்தனர்.சுந்தராபுரம் அடுத்து எல்.ஐ.சி., காலனி அருகே, குறிச்சிபுதூர் உள்ளது. வீடுகள், தொழிற்சாலைகள் உள்ள இப்பகுதியில், டாஸ்மாக் மதுபார் அமைக்க, பணி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் அப்பகுதியினர் கூடினர். கோவை வந்த அமைச்சர் மகேஷிடமும், சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனிலும் மனு கொடுத்தனர். அப்பகுதியினர் கூறுகையில், 'எங்கள் பகுதியில் மதுக்கடை அமைத்தால், பெண்கள் பாதிக்கப்படுவர். கடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது. இதனை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ