உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் பதிவு செய்ய கூடுதல் கவுன்ட்டர்கள்  திறக்க திட்டம்

அரசு மருத்துவமனையில் பதிவு செய்ய கூடுதல் கவுன்ட்டர்கள்  திறக்க திட்டம்

கோவை;அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பதிவு செய்ய கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்படவுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கேரளாவில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு முன் மருத்துவமனையில் உள்ள வெளி நோயாளிகள் பதிவு செய்யும் கவுன்ட்டரில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.அதன் பின் சம்பந்தப்பட்ட சிகிச்சை பிரிவுக்கு சென்று டாக்டர்களிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில் வெளிநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் கவுன்ட்டர் ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்று என, இரு கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.இதனால் குழந்தைகளுடன் வருபவர்களும், முதியவர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். நோயாளிகளின் சிரமத்தை குறைக்க கூடுதல் கவுன்ட்டர் திறக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ., (இருப்பிட மருத்துவ அதிகாரி) சரவண பிரியா கூறுகையில், “ அரசு மருத்துவமனையின் முன் பகுதியில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை பிரிவில் ஒரு பகுதியில் வெளிநோயாளிகள் கவுன்ட்டர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்க, 5 கவுன்ட்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி