உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் அரிப்பு தடுக்க மரக்கன்றுகள் நடவு

மண் அரிப்பு தடுக்க மரக்கன்றுகள் நடவு

கருமத்தம்பட்டி:மண் அரிப்பை தடுக்கும் வகையில், ஏரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், தடுப்பணைகள் மற்றும் குட்டைகளில் நீர் நிரம்பியது. ஏரிகளில் மண் அரிப்பை தடுக்கும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், மரக்கன்றுகள் நடப்பட்டன. மத்திய அரசின் நிதியில் உருவாக்கப்பட்ட, 'அம்ரித் சரோவர்' எனும் குட்டையின் ஏரியில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை, ஊராட்சி தலைவர் சந்திரசேகர் துவக்கி வைத்தார். அவர் கூறுகையில், ''கிட்டாம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள தடுப்பணைகள், குட்டைகள் கன மழையால் நிரம்பி உள்ளன. ஏரிகளை பலப்படுத்தும் விதத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி