| ADDED : ஆக 04, 2024 10:05 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அருகே, கோதவாடியில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் ரோட்டோரத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பவை மரங்கள். மரக்கன்றுகள் நட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இது சம்பந்தமாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுபோட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. கோதவாடியில் இருந்து கொண்டம்பட்டி செல்லும் ரோட்டோரத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சித் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். பி.டி.ஓ., விஜயகுமார் முன்னிலை வகித்தார். துாய்மைப் பணியாளர்கள், ஒரு கி.மீ., துாரத்திற்கு, குறிப்பிட்ட இடைவெளியில், புங்கன், வேம்பு என, 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர்.ஊராட்சி அலுவலகத்தில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மரக்கன்று நடவில் விருப்பம் உள்ளவர்கள் வாங்கிச் செல்லலாம், என, தெரிவிக்கப்பட்டது.