| ADDED : ஆக 07, 2024 08:51 AM
அன்னுார் : கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் ஏட்டு ரவிக்குமார், 40, என்பவர், தன் மொபைல் போனில் போட்டோ எடுத்தார். பின், அந்த மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி, சில்மிஷம் செய்து, ஆபாசமாக பேசி உள்ளார்.மதுரை அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார், தற்போது, கோவை சூலுாரில் வசித்து வருகிறார். ஏற்கனவே கோவை மாநகரில் பீளமேடு, சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும்போது இதுபோன்ற புகார்களுக்கு உள்ளாகி, ரூரல் போலீசுக்கு மாற்றப்பட்டார். அந்த மாணவி, போலீஸ்காரரின் மிரட்டல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள், கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இந்த வழக்கு சூலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சூலுார் போலீசார் ரவிக்குமார் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.