உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் குழந்தை சடலம் சிங்கை  போலீசார் விசாரணை

ரோட்டில் குழந்தை சடலம் சிங்கை  போலீசார் விசாரணை

கோவை:சிங்காநல்லுார் அருகே பிறந்த ஆண் குழந்தை இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சிங்காநல்லுார் குளக்கரை அருகே, நஞ்சப்பா நகர் உள்ளது. நேற்று முன்தினம் இங்குள்ள ஐந்தாவது வீதியில், அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் காலியிடத்தில்காரை நிறுத்தியுள்ளார். காரின் பின்புற 'டிக்கி'யை திறந்து பொருட்களை எடுப்பதற்காக, ஜெயபால் சென்றபோது அருகே பிறந்த ஆண் குழந்தை இறந்து கிடந்ததுதெரிந்தது.உப்பிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் பிரதிக்சாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பகுதியில் விசாரணை நடத்தினார்.குழந்தையின் உடல் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை