லாட்டரி விற்றவர் கைது
கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தை சேர்ந்தவர் லியகத்அலி, 54, கூலித்தொழிலாளி. இவர் கோவில்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தார். போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.இதில், சந்தேகத்தின் பேரில் லியாகத்அலியை விசாரித்ததில், லாட்டரி விற்பனை செய்தது உறுதியானதை தொடர்ந்து, அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் 250 ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர். பள்ளி மாணவி தற்கொலை
நெகமம், செட்டியக்காபாளையத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். டிரைவர். இவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது.இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோழிப்பண்ணைக்கு தெளிக்கும் மருந்தை எடுத்து சாப்பிட்டு, மயக்கம் அடைந்துள்ளார். இவரது பெற்றோர் மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் இதை கவனித்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்ென்றனர். இதில் சிறுமி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நெகமம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் பணம் திருட்டு
நெகமம், செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ், 62. இவர் பட்டர்பிளை சிட்டியில் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று வீடு வந்து பார்க்கும் போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தொடர்ந்து வீட்டில் உள்ள பீரோவை பார்த்த போது, அதில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்து, நெகமம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நெகமம் போலீசார் வழக்கு பதிந்து திருடனை தேடி வருகின்றனர்.