உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையத்தில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் மற்றும் ஸ்ரீ தர்மசாஸ்தா சேவா டிரஸ்ட் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக பொள்ளாச்சி பழனிகவுண்டர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன், தொடக்க கல்வி அலுவலக அமைப்பாளர் குணசேகர், கோரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் கதிர்வேல், தேவணாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பஞ்சலிங்கமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.மாணவ, மாணவியருக்கு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ