உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி;கள்ளச்சாராய மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மா.கம்யூ., பொள்ளாச்சி தாலுகா மற்றும் கிளைகளின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர கிளை செயலாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி, பொள்ளாச்சி தாலுகா மா.கம்யூ., கட்சி செயலாளர் அன்பரசன், கமிட்டி உறுப்பினர் மகாலிங்கம், அனைத்திந்திய மாதர் சங்க தாலுகா பொருளாளர் சித்ரா பேசினர். சின்னாம்பாளையம் கட்சி நிர்வாகி பிச்சை நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்தவருக்கு நிவாரணமும், அரசு அதிகாரிகள் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கள்ளச்சாராய மரணத்தை தடுக்க வேண்டும்.டாஸ்மாக் கடைகளில் வேலை நேரத்தை குறைக்கவும், படிப்படியாக கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மது இல்லாத தமிழ்நாட்டை நோக்கி செல்ல வேண்டும். 'நீட்' தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும். 'நீட்' தேர்வு முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை