| ADDED : ஜூலை 22, 2024 01:34 AM
கோவை:ஹிந்து கோவில்கள் நிர்வாகத்தில் இருந்து அரசு வெளியேற வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில், காந்தி பார்க்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆலயத்தை விட்டு அரசு வெளியேற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள், அறநிலையத் துறையால் சீரழிந்து கிடக்கின்றன. எதற்கெடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவில் சொத்துகள் கொள்ளை போயுள்ளன. சிலை திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோவில் சொத்து கோவிலுக்கே என்ற கோர்ட் தீர்ப்பை, உடனே அமல்படுத்த வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தின் போது, வலியுறுத்தப்பட்டது.அமைப்பின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், கோட்டச் செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், செய்தித் தொடர்பாளர் தனபால் உட்பட நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரசு அனுமதி மறுத்திருந்தது. தடை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட, 630 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.