உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் தேங்கும் மழைநீர்: வாகன ஓட்டுநர்கள் அவதி  

சாலையில் தேங்கும் மழைநீர்: வாகன ஓட்டுநர்கள் அவதி  

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - நடுப்புணி இடையிலான சாலையில், மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோவிந்தனுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி, வடக்கிபாளையம் பிரிவில் இருந்து, நடுப்புணி வரை, 17.4 கி.மீ., துாரத்திற்கு, மாநில நெடுஞ்சாலை நீள்கிறது. இந்த சாலையில், விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டும் மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை.தற்போது, பெய்யும் தொடர் மழையால், சாலையின் பல இடங்களில், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மழைநீர் தேக்கத்தை தவிர்க்க, வலது பக்கமாக ஒதுங்கிச் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.இது ஒருபுறமிருக்க, அதிவேகத்துடன் செல்லும் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள், தேங்கி நிற்கும் நீரை, சிதறடிக்கச் செய்கிறது. சாலையோரத்தில் குடியிருப்போர் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.ஒவ்வொரு பருவமழையின் போதும், இத்தகைய பிரச்னை தொடர்ந்தாலும், சாலையோரத்தில் மழைநீர் வடிகால் அமைக்க துறை ரீதியான அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. சாலையில், மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து, வடிகால் ஏற்படுத்தி மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், என, கோவிந்தனுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்